அரக்கோணம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


அரக்கோணம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Dec 2021 10:55 PM IST (Updated: 13 Dec 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

அரக்கோணம்

சென்னை திருநின்றவூரை சார்ந்தவர் நாகரத்தினம் (வயது 28). இவரது மனைவி சரண்யா (28). இவர்கள் வேலை தேடி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரக்கோணத்தை அடுத்த ஜேடரி அருந்ததிபாளையத்தில் உள்ள சரண்யாவின் தாய் வீட்டில் தங்கி வேலை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த சரண்யாவுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வேலை கிடைத்ததாக தெரிகிறது. இதனால் தாய் வீட்டின் அருகே புதிதாக சிமெண்டு ஷீட் அமைத்து வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டில் குடி புகுவதற்காக ஊரில் உள்ள பொருட்களை எடுத்து வரும்படி சரண்யா கணவர் நாகரத்தினமிடம் கடந்த சில தினங்களாக கூறியுள்ளார். 

இந்நிலையில் நேற்று புதிய வீட்டில் நாகராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு சரண்யா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டததால் சத்தம் கேட்டு உடனே அருகில் இருந்தவர்கள் வந்து நாகராஜை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story