மயானம் அமைக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்


மயானம் அமைக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Dec 2021 11:38 PM IST (Updated: 13 Dec 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் அருகே மயானம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருக்கனூர், டிச.
திருக்கனூர் அருகே மயானம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் இறந்தால், அங்குள்ள சங்கராபரணி ஆற்றங்கரையோரம் சடலத்தை புதைப்பது வழக்கம். தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த யாரேனும் இறந்தால் அவர்களை புதைக்க முடியாத நிலை உள்ளது. 
இந்த நிலையில்   நேற்று செல்லிப்பட்டு காலனியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை ஆற்றங்கரை பகுதியில் புதைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், செல்லிப்பட்டு மெயின் ரோட்டில் திரண்டு, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை 
இதுபற்றி தகவல் அறிந்து மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் விரைந்து வந்து       பொதுமக்களிடம் சமரச      பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய தற்காலிகமாக மாற்று ஏற்பாடு செய்வதாகவும், விரைவில் நிரந்தரமாக இடுகாடு அமைத்துத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story