திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக பிரியதர்ஷினி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த முத்துக்குமாரசாமி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கூடுதல் இயக்குனராகவும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயலாளர் மருத்துவர் மு.பிரியதர்ஷினி திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக மு.பிரியதர்ஷினி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை, வருவாய்த்துறை அலுவலர்கள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
அப்போது மு.பிரியதர்ஷினி கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில், நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகத்துக்கு உறுதுணையாக, நானும் ஒரு கருவியாக இருப்பேன்.
திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம். விவசாய மக்களுக்கு அரசு திட்டங்கள் கிடைக்கும் வகையில் பணியாற்றுவேன், என்றார்.
Related Tags :
Next Story