தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 Dec 2021 11:46 PM IST (Updated: 13 Dec 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

தேங்கி நிற்கும் மழைநீர்

வேலூர் அருகே அலமேலுமங்காபுரத்தில் 2-வது கிழக்கு குறுக்கு தெரு உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக தெருவில் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், மழை நீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

  -மோகனசுந்தரம், அலமேலுமங்காபுரம்.

உடைந்த சிறுபாலம்

  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரைநகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளி அருகே தெருவை இணைக்கும் சிறு பாலம் பாதி உடைந்த நிலையில் உள்ளது. இரும்புக்கம்பிகள் அனைத்தும் மேலே தூக்கியவாறு மிக ஆபத்தான நிலையில் உள்ளது. சிறு பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக வேண்டும்.
  -துைரராஜ், பாச்சல்.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

  ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த ரெட்டிவலம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். ரெட்டிவலம்-தென்னல் கிராமம் வரை 3 கி.மீ.தூர சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக உள்ளது. நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் சாலை பணியை தொடங்கி கிடப்பில் போட்டு விட்டனர். இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும்.
  -சுரேஷ், நெமிலி.

சேதமான மின்கம்பம்

  திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே இருதயபுரத்தில் உள்ள மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. கம்பிகள் வெளியே தெரிகிறது. பலத்த காற்று வீசும்போது கீழே விழும் ஆபத்து உள்ளது. மழைக்காலத்தில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க ேவண்டும்.
  -நாதன், வாணாபுரம்.

குப்பைகளை அகற்ற வேண்டும்

  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி விசாலாட்சி நகர் அரசு பெண்கள் பள்ளி பின்பக்க பகுதி தெருவில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைகளை நாய்கள், பன்றிகள், மாடுகள் நாலாபுறமும் கிளறி சிதற விடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் குப்பைகள் பறக்கிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுமா?
  -ராமமூர்த்தி, வாலாஜா.

சேதமான சாலை

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா குண்ணத்தூர் கூட்ரோடு பகுதியில் இருந்து அய்யம்பாளையம் திருவண்ணாமலை மெயின்ரோடு வரை ஜல்லிக்கற்கள் மற்றும் எம்.சாண்ட் மண் ஆகியவற்றை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் சாலை சேதம் அடைந்துள்ளது. அந்த வழியாக வரும் அரசு டவுன் பஸ் போக்குவரத்து தடைப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளிகள் வேலைக்கு சென்று வர சிரமப்படுகிறார்கள். அதிகாரிகள் சாலையை சீர் செய்வார்களா?
  -சு.அருண்குமார், மேல்நகர்.

Next Story