ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வெற்றிலைக்கார தெருவை சேர்ந்தவர் ஆசிக்ரகுமான். இவருடைய மனைவி பாத்திமா நுவைரா (வயது 37). இவர் பரமக்குடியில் உறவினர் இல்ல திருமண விழாவிற்கு செல்வதற்காக ராமநாதபுரம் பஸ்நிலையம் சென்றார். அங்கு அரசு பஸ்சில் ஏறி பரமக்குடிக்கு சிறிது தூரம் சென்றபோது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் ஏறும்போதோ, பஸ்சில் வைத்தோ யாரோ திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.