இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
உலக நன்மை வேண்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலக மக்கள் நலன் பெற வேண்டியும், விவசாயம் செழிக்கவும், ஒமைக்ரான் ஆகியவற்றிலிருந்து மக்கள் மீண்டு வரவும் சிறப்பு யாக பூஜைகள் நேற்று நடைபெற்றன. பின்னர் 1,008 சங்குகள் கொண்டு சங்காபிஷேக பூஜைகளும் நடைபெற்றன. இந்த சங்காபிஷேக பூஜையை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சங்காபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் ஆணையாளர் கருணாகரன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழுவினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story