குடியிருப்புகளுக்குள் தேங்கி நிற்கும் மழைநீர்
அருப்புக்கோட்டை அருகே குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக குளங்கள், கண்மாய்கள் என அனைத்து நீர்நிலைகளும் நிறைந்து விட்டன. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பாளையம்பட்டியில் செவல் கண்மாய் நிறைந்து மழைநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல சிரமப்படுகின்றனர். பாளையம்பட்டியில் இருந்து கட்டங்குடி செல்லும் சாலையில் உள்ள 5 வீடுகளுக்குள் புகுந்த நீர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வடியாமல் அப்படியே உள்ளதால் வீட்டிற்குள் செல்ல முடியாமல் அந்த வீட்டில் உள்ளவர்கள் தவித்து வருகின்றனர். வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகி விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே குடியிருப்புகளுக்குள் தேங்கி நிற்கும் மழைநீரை உடனே வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story