சேலம் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 Dec 2021 1:51 AM IST (Updated: 14 Dec 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்,
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 42 பேருக்கு கொரோனா பாதித்தது. நேற்று புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகர் பகுதியில் 10 பேர் பாதிக்கப்பட்டனர். கொங்கணாபுரம், மேச்சேரி, சங்ககிரி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, மேட்டூரில் தலா ஒருவர், பனமரத்துப்பட்டியில் 2 பேர், வீரபாண்டியில் 3 பேர், மகுடஞ்சாவடியில் 4 பேர் பாதிக்கப்பட்டனர். நாமக்கல், சென்னை, தர்மபுரி, திருச்சி ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து 17 பேர் உள்பட 43 பேர் பாதிக்கப்பட்டனர். 


Next Story