உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மான் சாவு


உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மான் சாவு
x
தினத்தந்தி 14 Dec 2021 1:58 AM IST (Updated: 14 Dec 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மான் செத்தது.

மங்களமேடு:
மங்களமேட்டை அடுத்துள்ள அத்தியூர் கிராமத்தில் நேற்று காலை சுமார் 4 வயது மான் வழிதவறி ஊருக்குள் வந்தது. இதைக் கண்ட அந்த ஊரை சேர்ந்த சீனிவாசன் மற்றும் சோபன் பாபு ஆகியோர் மானை பிடித்து கட்டிவைத்துவிட்டு, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் கணேசன் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் சசிகுமார், வனவர் குமார், வனக்காப்பாளர் குருசாமி, காவலர் வீரராகவன் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களிடம் கிராம உதவியாளர் முருகேசன் முன்னிலையில் அந்த மான் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்த மானை வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போது அச்சத்தின் காரணமாக வழியிலேயே அந்த மான் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வி.களத்தூர் கால்நடை மருத்துவர் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்து ரஞ்சன்குடி காப்புக் காட்டில் அந்த மான் புதைக்கப்பட்டது.

Related Tags :
Next Story