கொட்டாம்பட்டி பகுதிகளில் காணை நோய் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு
கொட்டாம்பட்டி பகுதிகளில் காணை நோய் தாக்கி ஆடுகள் உயிரிழந்து வருவதால் அந்த பகுதியில் சிகிச்சை முகாம் நடத்த வேண்டும் என ஆடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி பகுதிகளில் காணை நோய் தாக்கி ஆடுகள் உயிரிழந்து வருவதால் அந்த பகுதியில் சிகிச்சை முகாம் நடத்த வேண்டும் என ஆடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோய் தாக்கி உயிரிழப்பு
கொட்டாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகளுக்கு காணை நோய் தாக்கி வருவதால் செம்மறி ஆடு வளர்ப்பவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களாக மாடுகளுக்கு ஏற்பட்ட காணை நோய் தற்போது ஆடுகளையும் தாக்கி வருகிறது கொட்டாம்பட்டியை அடுத்த மங்களாம்பட்டியில் கண்ணன் என்பவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக காணை நோய் தாக்கியதில் அடுத்தடுத்து 20 ஆடுகள் வரை உயிரிழந்துள்ளது. இதுபோல் கொட்டாம்பட்டி வட்டாரத்தில் ஏராளமான ஆடுகளுக்கும் இந்த நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. நோய் தாக்கிய ஆடுகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தும் குணமடையாமல் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
கால்நடை முகாம்
அதுமட்டுமல்லாமல் இந்த நோய் ஆடுகளை தாக்கினால் கால்களில் புண்கள் ஏற்பட்டு இரைகளை உண்ணாமல் சோர்வாக காணப்பட்டு திடீரென உயிரிழக்கின்றன.
இதனை தடுக்க கொட்டாம்பட்டி பகுதியில் கால்நடை முகாம் அமைத்து ஆடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story