கோவிலில் திருட்டு
கோவிலில் திருட்டு
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டியில் லிங்கம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குட்லாடம்பட்டியை சேர்ந்த ரெங்கசாமி(வயது 45) பூசாரியாக இருந்து வருகிறார். இந்தநிலையில் சரவணன் என்பவர் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த சென்ற போது கோவில் பூட்டு உடைத்து கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் இருந்த பூஜை பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story