உடன்குடியில் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் கைது
உடன்குடியில் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி புதுமனை பள்ளிவாசல் கிழக்கு தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் ஜெயக்குமார் (வயது 40). இவர் மதுபோதையில் ஒரு குறிப்பிட்ட மத பெண்களை தவறாக பேசி வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல் ஹாசன் மகன் பரகத்துல்லா (31) இதுகுறித்து ஜெயக்குமாருடன் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அவரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பரகத்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தார்.
Related Tags :
Next Story