கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் நல்லையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், கோவில்பட்டி தாலுகா தலைவர்கள் சிவராமன், ரவீந்திரன், பிச்சையா, கிருஷ்ணமூர்த்தி, பொன்னுச்சாமி, தாலுகா செயலாளர்கள் லெனின் குமார், வேலாயுதம், கிருஷ்ணமூர்த்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தேசிய குழு உறுப்பினர் பாலமுருகன், எட்டயபுரம் பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டர் சங்கர நாராயணனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், “நடப்பு பருவத்தில் மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 2020, 2021-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். மழையால் இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யூரியா போன்ற உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story