சுயம்பு பாதமலையனூர் அம்மன் கோவில் ஆண்டு விழா


சுயம்பு பாதமலையனூர் அம்மன் கோவில் ஆண்டு விழா
x
தினத்தந்தி 14 Dec 2021 9:06 PM IST (Updated: 14 Dec 2021 9:06 PM IST)
t-max-icont-min-icon

சுயம்பு பாதமலையனூர் அம்மன் கோவில் ஆண்டு விழா

முத்தூர், 
 முத்தூர் சுயம்பு பாதமலையனூர் அம்மன் கோவில் 12-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு மங்கள இசை, மேளதாளத்துடன் விழா தொடங்கியது.  காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், மகா வேள்வி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு வலம்புரி விநாயகர், சுயம்பு பாதமலையனூர் அம்மன், தேவசேனா வள்ளி உடனமர் கல்யாண சுப்பிரமணியர், கோமதி அம்மன், ராகு- கேது நாகர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story