தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகள்
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகள்
உடுமலை
வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி அடுத்த மாதம் (ஜனவரி) 25-ந்தேதியன்று 12-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ளது. ஜனநாயக நாட்டில் தேர்தலின் முக்கியத்துவம், 100 சதவீதம் வாக்குப் பதிவு, வாக்காளர் உதவி மொபைல் செயலி, நேர்மையான முறையில் வாக்களிக்கத் வேண்டுதல் மற்றும் தேர்தலின் முக்கியத்துவம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், உடுமலை தளி சாலையில் உள்ளபாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாணவிகளுக்கு பள்ளி அளவிலான கட்டுரை, ஓவியம், குழு நடனம், பாட்டுப்போட்டி, சுலோகன் எழுதுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிரியை ப.விஜயா தலைமை தாங்கினார். தாசில்தார் வி.ராமலிங்கம் போட்டிகளைப்பார்வையிட்டார். உதவித்தலைமை ஆசிரியர் டி.சிவக்குமார், தமிழாசிரியர்கள் வே.சின்னராசு, ஆர்.ராஜேந்திரன், ஆசிரியை வை.விஜயலட்சுமி, இசை ஆசிரியை எம்.கஜலட்சுமி, கலை ஆசிரியை லாவண்யா ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.
Related Tags :
Next Story