பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும்
பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும்
திருப்பூர்,
பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஜெயந்தி அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரும், நில நிர்வாக கூடுதல் ஆணையாளரான ஜெயந்தி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஜெயந்தி பேசியதாவது:-
வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் மற்றும் திருத்தம் செய்யக்கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களை இணைத்து பெறப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
பெயர் நீக்கம் விண்ணப்பங்கள்
பெயர் நீக்கம் செயக்கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உரிய ஆவணங்களை இணைத்திருப்பதையும் உறுதி செய்து களவிசாரணை மேற்கொண்டு முடிவு செய்ய வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களை இணையவழியாக பதிவு செய்யும் முறைகளான NVSP, VHA. VoterPortel மூலம் பதிவு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் தொடர்பு மையத்தை நேரில் ஆய்வு செய்து வாக்காளர்களின் தொலைபேசி அழைப்பை தவறாமல் எடுத்து அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ற தகவலை மிகவும் கனிவாக தெரிவிக்க வேண்டும் என்றார். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்களில் பெற்ற படிவங்களை பெற்று சம்பந்தப்பட்டவர் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ. ஜெகநாதன், தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story