கோவில்பட்டியில் நாளை தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கிபோட்டி தொடங்குகிறது
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் 11வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி நாளை தொடங்கி 25ந்தேதி வரை நடைபெறுகிறது
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் 11-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 30 மாநில ஆக்கி அணிகள் பங்கு பெறுகின்றன.
போட்டியில் பங்குபெறும் ஆக்கி அணி வீரர்கள் தங்குவதற்கும், உணவு, போக்குவரத்து வசதிகளையும் கே.ஆர். கல்வி நிறுவனங்கள் செய்துள்ளன. போட்டியில் பங்கு பெறுவதற்காக வந்துள்ள தமிழ்நாடு, ஒடிசா, சண்டிகார், மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், மிசோராம், கர்நாடகா, மகாராஷ்டிரா அணிகளைச் சேர்ந்த 160 வீரர்களுக்கு நேற்று நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் டாக்டர்கள் மனோஜ், ஜெஸ்பின் மீனா தலைமையில் மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனைகள் நடத்தினர்.
நாளை காலை 7 மணிக்கு கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் போட்டிகள் தொடங்குகின்றன. போட்டி ஏற்பாடுகளை தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி தலைவர் கனிமொழி எம்.பி, துணை தலைவர்களான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், செயலாளர் சேகர் ஜே.மனோகரன், இணை செயலாளர் செந்தில் ராஜ்குமார், பொருளாளர் சங்கிலி காளை மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story