சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 65 பேரை போலீசார் கைது செய்தனர்
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 65 பேரை போலீசார் கைது செய்தனர்
திருப்பூர்,
திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நேற்று காலை திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 என்பதை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ரூ.1,500 உதவித்தொகை பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் நரம்பியல் மருத்துவர் கண்டிப்பாக வர வேண்டும். புதிதாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 1 வருடமாக உதவித்தொகை வழங்காமல் இருப்பதை கண்டித்தும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
65 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 52 பேரை வடக்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதுபோல் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தெற்கு மாநகர செயலாளர் ரமேஷ் தலைமையில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 6 பெண்கள் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story