தனியார் நிறுவன பெண் மேலாளர் தற்கொலை
மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வேலைக்கு செல்ல வேண்டாம் என கணவர் கூறியதால் தனியார் நிறுவன பெண் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி, டிச.
மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வேலைக்கு செல்ல வேண்டாம் என கணவர் கூறியதால் தனியார் நிறுவன பெண் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தனியார் மேலாளர்
புதுவை குயவர்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மோகன். இவர் உருளையன்பேட்டை அய்யனார் கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லதா (வயது 46), தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் அவர்களது மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேலைக்கு செல்லவேண்டாம் என்று மோகன் கூறியுள்ளார். இதனால் லதா கோபமடைந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லதா தூக்குப்போட்டு தொங்கினார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர், அவரை தூக்கில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் லதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் லதா உயிரிழந்தது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story