வேடசந்தூரில் மில் தொழிலாளி வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை
வேடசந்தூரில் பட்டப்பகலில் மில் தொழிலாளி வீட்டில் 17 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேடசந்தூர்:
வேடசந்தூரில் பட்டப்பகலில் மில் தொழிலாளி வீட்டில் 17 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மில் தொழிலாளி
வேடசந்தூர் வ.உ.சி.நகரில் வசித்து வருபவர் ஆனூர்சாமி (வயது 40). மில் தொழிலாளி. இவரது மனைவி சுசிலா. ஜவுளிக்கடை ஊழியர். இவர்களுக்கு ஆனந்தகண்ணன் (10) என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ஆனூர்சாமி வழக்கம்போல் மில்லுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதேபோல் சுசிலாவும் ஜவுளிக்கடைக்கு சென்றுவிட்டார். பள்ளி விடுமுறை என்பதால் ஆனந்தகண்ணன் சிறிது நேரம் வீட்டில் இருந்தார். பின்னர் வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு தனது தாயார் வேலை பார்க்கும் ஜவுளிக்கடைக்கு சென்றுவிட்டான்.
இதனால் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த தங்கச்சங்கிலி, மோதிரம், தோடு, மூக்குத்தி உள்ளிட்ட 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
நகைகள் கொள்ளை
இதற்கிடையே இரவில் வேலை முடிந்து ஆனூர்சாமியும், அவரது மனைவி, மகனும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்ததுடன், லாக்கரில் வைத்திருந்த தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஆனூர்சாமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story