பொய்கை அருகே இறந்தவரின் உடலை ஏரி தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம்
பொய்கை அருகே இறந்தவரின் உடலை ஏரி தண்ணீரில் தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணைக்கட்டு
பொய்கை அருகே இறந்தவரின் உடலை ஏரி தண்ணீரில் தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்டது பொய்கை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு பகுதியில் 300 குடும்பங்களும், முல்லை நகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அந்தப் பகுதியில் சுடுகாடு உள்ளது. சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை முற்றிலும் சிதைந்து போய் உள்ளதால் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று காலை இறந்துவிட்டார். அவரது உடலை முல்லை நகர் பகுதியில்உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முடியாமல் ஈச்சங்காடு கிராமத்திற்கு சொந்தமான சுடுகாட்டில் அடக்கம் செய்ய அந்த ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை இறந்தவர் உடலை புத்தூர் ஏரி அருகே உள்ள ஈச்சங்காடு சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏரியில் தண்ணீர் இருந்ததால் ஏரி தண்ணீர் வழியாக உடலை தூக்கிச்சென்றனர்.
சாலையை உயர்த்த வேண்டும்
இதுகுறித்து ஈச்சங்காடு பொதுமக்கள் கூறுகையில் சுடுகாட்டு பாதை ஏரியின் நடுவே போடப்பட்டு உள்ளது. மழைக் காலங்களில் ஏரியில் தண்ணீர் நிரம்பி விடுகிறது. இதனால் உடலை எடுத்துச் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே இந்த சாலையை கல்வெட்டுக்கள் அமைத்து சுமார் 4 அடி உயரத்திற்கு உயர்த்தி சாலை அமைத்து தர வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story