தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது. நகையை கொடுத்து மதுகுடித்து உல்லாசமாக இருந்தது அம்பலம்
பேரணாம்பட்டு பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருடிய நகையை கொடுத்து மது குடித்து உல்லாசமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருடிய நகையை கொடுத்து மது குடித்து உல்லாசமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
திருட்டு வழக்கில் 3 பேர் கைது
பேரணாம்பட்டு பகுதியில் கடந்த 6 மாதங்களாக பூட்டிய வீடுகளை மர்ம நபர்கள் நோட்டமிட்டு நகை, பணத்தை திருடி வந்தனர். இது சம்பந்தமாக பேர்ணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே மசிகம் கிராமத்தில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் மூன்று நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக கூறினர்.
அதைத்தொடர்ந்து அவர்களை பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள உதயேந்திரத்தை சேர்ந்தவர் சுவேல் (வயது 26), பேரணாம்பட்டு டவுன் குட்டைப்பகுதியை சேர்ந்த மணி (22), சேரன் வீதியை சேர்ந்த இம்ரான் அகமது (22) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 3 பேரும் சேர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நகையை கொடுத்து மது குடித்தனர்
சுவேல் மீது மட்டும் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் 14-க்கு மேற்பட்ட திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்று ஜாமினில் வந்து மீண்டும் திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளர். மணி, இம்ரான்அஹம்மது சென்னையில் ஓட்டலில் தொழிலாளியாக வேலைபார்த்து, கொரோனா ஊரடங்கில் ஊருக்கு வந்த இடத்தில் சுவேலிடம் கூட்டாளிகளாக சேர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
திருடிய நகைகளை விற்றும், டாஸ்மாக் கடையில் கொடுத்து மது பாட்டில்கள் வாங்கி குடித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
3 பேரும் 36¼ பவுன் நகைகளை திருடி உள்ளனர். அவர்களிடமிருந்து 10 பவுன் நகை, எல்.இ.டி. டிவி, ஆந்திரா பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story