மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.115 கோடி கடன் உதவி. அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்


மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.115 கோடி கடன் உதவி. அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
x
தினத்தந்தி 14 Dec 2021 11:22 PM IST (Updated: 14 Dec 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.115 கோடி கடன் உதவி

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆற்காடு ஜே.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். 

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 2,697 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.115.82 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி மற்றும் ஒன்றியக் குழு தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story