மாற்றுத்திறனாளிகள் மருத்துவ காப்பீடு அட்டை மூலம் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்
மருத்துவ காப்பீடு அட்டை மூலம் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் 162 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பங்களை வழங்கினர். மருத்துவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, சான்றிதழ் வழங்கினர்.
இந்த சான்றிதழ்களின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை இது வரையில் பெற்றிராத 22 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் மாற்றுத் திறனாளிகள் மருத்துவக் காப்பீடு அட்டையின் மூலம் அறுவை சிகிச்சைகள், டயாலிசிஸ் சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகளை பெற்று பயன்பெறலாம் என்றார். முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், முதல்-அமைச்சர் காப்பீடு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானம், மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story