விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2021 11:33 PM IST (Updated: 14 Dec 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ரா.முல்லை தலைமை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில், ‘‘விவசாயிகளுக்கான உரங்களை தட்டுப்பாடின்றி வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உடனடியாக வழங்கிட வேண்டும். மழை வெள்ள பாதிப்பில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் மண் சரிந்து விழுந்து பாதிக்கப்பட்ட கிணறுகள், மின் மோட்டார்களை புனரமைக்க கிணற்று பாசன விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

திருப்பத்தூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக தொடங்க வேண்டும். கெலவரப்பள்ளி அணையில் இருந்து செட்டேரி அணைக்கு இணைப்புக் கால்வாய் அமைத்திட வேண்டும்’’ என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நகர செயலாளர் எம்.சுந்தரேசன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

Next Story