விஷம் குடித்து விட்டு தூக்கில் பிணமாக தொங்கிய தந்தை-மகன்


விஷம் குடித்து விட்டு தூக்கில் பிணமாக தொங்கிய தந்தை-மகன்
x
தினத்தந்தி 14 Dec 2021 11:53 PM IST (Updated: 14 Dec 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் விஷம் குடித்து விட்டு தூக்கில் தந்தை-மகன் பிணமாக தொங்கினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமக்குடி,

  பரமக்குடியில் விஷம் குடித்து விட்டு தூக்கில் தந்தை-மகன் பிணமாக தொங்கினர். அவர்களது பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோதிடர்


  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முசாபர் கனி தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 65). ேஜாதிடர்.. இவரது முதல் மனைவி பவானி. அவரது மகன்கள் வெங்கடேஷ்(27). நிவாஸ்(25). பவானி திடீரென நோய்வாய்பட்டு இறந்து விட்டார்.

  அதைத்தொடர்ந்து லோகநாதன், கல்பனா என்ற மற்றொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரிையயாக பணியாற்றி வந்தார். அவரும் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது பென்ஷன் தொகையை வாங்கி தான் ேலாகநாதன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி


  இந்நிலையில் மூத்த மகன் வெங்கடேஷுக்கு திருமணமாகி யுவஸ்ரீ என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மூளையில் கட்டி உள்ளது. அதை ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதையடுத்து வெங்கடேஷ் திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் ஆபரேசனுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கு ரூ.18 லட்சம் வரை செலவாகும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

  உடனே வெங்கடேஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், மூலம் ஆபரேஷனுக்கு தேவையான தொகையை செலுத்த முடிவு செய்து அதற்கான நிதியை திரட்டி வருகின்றனர்.

தூக்கில் தொங்கினர்


  இதனால் லோகநாதன் விரக்தி அடைந்து வீட்டிலேயே இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வெகுநேரமாகியும் இவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது லோகநாதனும், அவரது 2-வது மகன் நிவாசும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். வீட்டில் விஷ பாட்டில் கிடந்து உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும் போது, லோகநாதன் தனது 2 மனைவிகளும் இறந்த பின்னர் பிள்ளைகளுக்காக வாழ்ந்து வந்து உள்ளார். இந்த நிலையில் மூத்த மகன் வெங்கடேசுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ செலவுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டதால் மனம் உடைந்து உள்ளார். ஏற்கனவே 2-வது மகன் நிவாசும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் கவலை அடைந்து இருவரும் விஷம் குடித்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம். இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அவர்கள் சாவு பற்றி முழு விவரம் தெரிய வரும் என்றனர்.



Next Story