ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்


ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்
x
தினத்தந்தி 15 Dec 2021 12:34 AM IST (Updated: 15 Dec 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது

அன்னவாசல்
அன்னவாசல் அருகே உள்ள உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி கவிதா (வயது 24). நிறைமாத கர்ப்பிணியான கவிதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், அன்னவாசல் அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் உசிலம்பட்டி சென்று கவிதாவை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது கவிதாவிற்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை உணர்ந்த மருத்துவ உதவியாளர் அருண்பாண்டியன், பைலட் கிருஷ்ணசாமி ஆகியோர் கர்ப்பிணிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். அப்போது கவிதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும், சேயும் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை கவிதாவின் உறவினர்கள் பாராட்டினர்.


Next Story