விபத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் சாவு
விபத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் உயிரிழந்தார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரை சேர்ந்தவர் அலெக்சாண்டர்(வயது 46). இவர் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
உடையார்பாளையம் இடையார் பிரிவு சாலை அருகே வந்தபோது அலெக்சாண்டர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story