2,248 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.98 கோடி கடன் உதவி


2,248 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.98 கோடி கடன் உதவி
x
தினத்தந்தி 15 Dec 2021 12:44 AM IST (Updated: 15 Dec 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் 2,248 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.98 கோடி கடன் உதவியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் 2,248 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.98 கோடி கடன் உதவியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

ரூ.98 கோடி கடன் உதவி

தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடனுதவி வழங்கும் விழா சிவகங்கையில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குனர் வானதி வரவேற்று பேசினார்.
விழாவில் கலெக்டர் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-
மகளிர் பொருளாதாரம் முன்னேற்றம் பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் 2,248 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன.இவர்களுக்கு ரூ.98 கோடியே 48 லட்சத்து 7 ஆயிரம் வங்கிக்கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து ெகாண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நாகநாதன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜீனு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் துரைஆனந்த், மகளிர் திட்ட உதவித்திட்ட அலுவலர் விஷ்ணுபரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story