கட்டிட தொழிலாளி தற்கொலை
களக்காடு அருகே கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வீ.கே.நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (30). இவர்களுக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் முத்துக்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், முத்துக்குமார், விஜயலட்சுமியை தாக்கினார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் முத்துக்குமாரை சமாதானம் செய்து வைத்தனர். அதன்பின்னரும் முத்துக்குமார் மனம் மாறாமலும், மனைவியின் நடத்தை குறித்த சந்தேகத்திலும் இருந்து வந்தார்.
இதற்கிடையே சம்பவத்தன்று வீட்டில் இருந்த முத்துக்குமார் விஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்த விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதையடுத்து முத்துக்குமாரை நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story