விவசாயிகள் போராட்டம்
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு கரும்பு அரவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலை முன்பாக தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் பழனிசாமி தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் மொக்கமாயன், சங்க செயலாளர் கதிரேசன், மாவட்ட தலைவர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகி போஸ் வரவேற்றார்.
இதில் பதிவு செய்யப்பட்டுள்ள கரும்புகளை அரவைக்கு எடுத்து உடனடியாக ஆலை மீண்டும் செயல்பட வலியுறுத்தியும், ஆலையில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் நிறைவு பெறாத நிலையில் உள்ளது. இந்தபணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். எனவே தமிழக அரசு கரும்பு விவசாயிகள் நலன் கருதி ஆலையை இந்த ஆண்டே இயக்க வேண்டும் என தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story