தரையில் அமர்ந்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
வரைவு வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம்
வரைவு வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளறுபடி
திருமங்கலம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் திருமங்கலம் நகராட்சி வார்டுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் மாறி மாறி வெவ்வேறு வார்டுகளில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனைக் கண்டித்து திருமங்கலம் நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
மனு
பின்னர் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி நகராட்சி ஆணையரிடம் கொடுத்தனர். இதுகுறித்து நகராட்சி செயலாளர் விஜயன் கூறியதாவது, வாக்காளர் வரைவு பட்டியல் பெயர்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தினால் உயர் அதிகாரிகளை சந்திப்போம் என தெரிவித்தார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் டெரன்ஸ் லியோன் கூறும்போது, வார்டு வரையறை மற்றும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக அ.தி.மு.க.வினர் மனு கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story