கும்மிடிப்பூண்டி அருகே ரத்த வாந்தியுடன் வடமாநில தொழிலாளி மர்மச்சாவு - போலீசார் விசாரணை
கும்மிடிப்பூண்டி அருகே ரத்த வாந்தி எடுத்த நிலையில் வடமாநில தொழிலாளி பிணமாக கிடந்தார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இதில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுரி சங்கர் குமார் (வயது 24). இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வாடகைக்கு அறை எடுத்து வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை தங்கிருந்த அறையில், ரத்த வாந்தி எடுத்த நிலையில் கவுரி சங்கர் குமார் பிணமாக கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கவுரி சங்கர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story