சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவிலில் கைசிக துவாதசி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு


சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவிலில் கைசிக துவாதசி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 7:25 PM IST (Updated: 15 Dec 2021 7:25 PM IST)
t-max-icont-min-icon

அண்ணன் பெருமாள் கோவிலில் கைசிக துவாதசி விழா

திருவெண்காடு:-

சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு, இவர் அண்ணன் என்பதால் இவருக்கு அண்ணன் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதாக தலவரலாறு கூறுகிறது. திருப்பதி பெருமாளுக்கு வேண்டுதல் செய்த பக்தர்கள், அந்த நேர்த்திக்கடனை இந்த கோவிலில் செய்யலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் கொண்டாடப்படும் கைசிக துவாதசி விழா நேற்று நடந்தது. இதனையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். அப்போது திரளான பக்தர்கள் நாராயணா, நாராயணா என சரண கோஷம் எழுப்பி பெருமாளை தரிசித்தனர். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story