கோத்தகிரி அருகே விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி


கோத்தகிரி அருகே விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி
x
தினத்தந்தி 15 Dec 2021 8:31 PM IST (Updated: 15 Dec 2021 8:31 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி

கோத்தகிரி

கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் கோத்தகிரி அருகே தீனட்டி கிராமத்தில் வயல்வெளி பயிற்சி, அறுவடை மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 

கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை வகித்தார். அட்மா திட்ட அலுவலர் மணிமேகலா வரவேற்றார்.
கோத்தகிரி வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் சந்திரன் கலந்துகொண்டு, அறுவடை தொழில்நுட்பம் மற்றும் காய்கறிப் பயிர்கள் அறுவடைபின் சார் தொழில் நுட்பம் குறித்து பேசினார். 

முன்னோடி விவசாயி கணேசன் கலந்துகொண்டு, காய்கறிப் பயிர்களில் மதிப்பு கூட்டுதலின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார். அட்மா திட்டத்தின் மூலம் நடத்தப்படும் தொழில் நுட்ப பயிற்சிகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் குறித்த அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் விளக்கினார். இந்தப் பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் அட்மா திட்ட அதிகாரி பிரவீனா நன்றி கூறினார்.


Next Story