கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.1.20 லட்சம் திருட்டு


கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.1.20 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 15 Dec 2021 9:11 PM IST (Updated: 15 Dec 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற ஆசிரியரின் மொபட்டில் வைத்திருந்த 1லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது

கோவில்பட்டி:
கோவில்பட்டி முத்து நகரில் குடியிருப்பவர் தியாகராஜன் (வயது 72). ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர். இவர் கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப் பட்ட வங்கியில் ரூ.1.20 லட்சத்தை எடுத்துக்கொண்டு, தனது கைப்பையில் பணம், ஏடிஎம் கார்டு, செல்போன் அகியவற்றை போட்டு,  மொபட்டில் சைடு பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார்.  பின்னர் மொபட்டை எதிரே உள்ள ஆலய வளாகத்தில் வைத்து விட்டு, அங்கே இருந்த நண்பர்களிடம் பேசி விட்டு திரும்பியுள்ளார். அதற்குள் ெமாபட்டிலிருந்த பெட்டியில் வைத்து சென்ற ரூ.1.20 லட்சத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story