‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை சீரமைக்கப்படுமா?
நாகை நகரில் நாகை-காரைக்கால் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக அரசு ஆஸ்பத்திரி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்திற்கு நிறைந்ததாக காணப்படும். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் பள்ளிங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் வருவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், நாகை.
புதர் சூழ்ந்து காணப்படும் கிராம நிர்வாக அலுவலகம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பகுதியில் திருக்களம்பூர் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பயன் பெற்று வந்தனர். தற்போது இந்த கிராம நிர்வாக அலுவலகம் சேதமடைந்து வருகிறது. மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சி அளிப்பதோடு விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் விளங்குகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் சேவைகளை பெறுவதில் பெறும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகத்தை கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சந்துரு, திருக்களம்பூர்.
Related Tags :
Next Story