கிளியனூரில் காரில் அஜாக்கிரதையாக பட்டாசுகளை கொண்டு சென்றவர் கைது
கிளியனூரில் காரில் அஜாக்கிரதையாக பட்டாசுகளை கொண்டு சென்றவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை சிறப்பு பிரிவு போலீசார், திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் கிளியனூர் சோதனைச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரினுள் 4 சாக்கு மூட்டைகளில் வாணவெடி, சரவெடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து கிளியனூர் போலீசில் ஒப்படைத்தனர்.
வாலிபர் கைது
இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தை அடுத்த நல்லப்பரெட்டிப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கதிர்வேல் (வயது 27) என்பதும்,
இவர் அரியாங்குப்பத்தில் உரிமத்துடன் நடத்தப்படும் பட்டாசு ஆலையில் இருந்து செஞ்சியில் உள்ள பட்டாசு கடைக்கு வாணவெடி, சரவெடிகளை கொண்டு சென்றதும், எளிதில் தீப்பற்றக்கூடிய இவற்றை அஜாக்கிரதையாக காரில் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கதிர்வேல் மீது கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story