சிக்கண்ணா அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் தர்ணா


சிக்கண்ணா அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் தர்ணா
x

சிக்கண்ணா அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் தர்ணா

திருப்பூர்:
திருப்பூர் காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 19 பாடப்பிரிவுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியின் வளாகத்துக்குள் 11.2 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.9 கோடி மதிப்பில் உயர்தர விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
கல்லூரியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டவும், புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் போதுமான இடவசதியில்லை என்று கூறியும், இதன்காரணமாக சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்துக்குள் விளையாட்டு அரங்கம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று கல்லூரி மாணவ-மாணவிகள், கல்லூரியின் நுழைவுவாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
கல்லூரி நிலம் கல்லூரிக்கே, மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை தடுக்கக்கூடாது, அப்துல் கலாம் பூங்காவை அழிக்கக்கூடாது, கல்லூரி நிலத்தை பறிக்கக்கூடாது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் கைகளில் ஏந்தியபடி தர்ணாவில் பங்கேற்றனர்.

Next Story