அறந்தாங்கியில் மாணவன் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது வழக்கு


அறந்தாங்கியில்  மாணவன் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Dec 2021 11:25 PM IST (Updated: 15 Dec 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

மாணவன் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறந்தாங்கி:
அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள குரும்பகாட்டில் லாரல் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கீரமங்கலத்தை சேர்ந்த சுதர்சன். இவர் நேற்றுமுன்தினம் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேர் பள்ளி இடைவெளி நேரத்தில் கழிவறை சென்று விட்டு வந்தபோது உடல்கல்வி ஆசிரியர் விசாரணை செய்து ஒரு மாணவனின் கன்னத்தில் அறைந்தார். இதில் அவரது வலது காதில் ரத்தம் வந்தது. இதையடுத்து அவருக்கு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் மாணவன் கன்னத்தில் அறைந்த உடற்கல்வி ஆசிரியர் சுதர்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story