தடுப்பூசி செலுத்தாவிட்டால் அனுமதி இல்லை


தடுப்பூசி செலுத்தாவிட்டால் அனுமதி இல்லை
x
தினத்தந்தி 15 Dec 2021 11:48 PM IST (Updated: 15 Dec 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி வாரச்சந்தையில் தடுப்பூசி செலுத்தாத வர்களுக்கு வியாபாரம் செய்யவும், பொருட்களை வாங்கி செல்லவும் அனுமதியில்லை என்று பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாடிப்பட்டி, 
வாடிப்பட்டி வாரச்சந்தையில் தடுப்பூசி செலுத்தாத வர்களுக்கு வியாபாரம் செய்யவும், பொருட்களை வாங்கி செல்லவும் அனுமதியில்லை என்று பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
எச்சரிக்கை
வாடிப்பட்டி வாரசந்தை பஸ்நிலையம் அருகில் உள்ளது. இந்த சந்தையில் வாரத்திற்கு ஒருமுறை காய்கறிகள், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வியாபாரம் நடைபெறும். இநத்நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டியும், ஊரடங்கு தளர்வுகள் குறைக்கப்பட்டு வருவதையொட்டியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன் எச்சரிக்கையாக கூட்டம்கூடும் இடங்களில் குறிப்பாக சந்தையில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. 
இது சம்பந்தமாக கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி தலைமையில் சுகாதார ஆய்வாளர் பொன்முத்துகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், சுகாதாரபணி மேற்பார்வையாளர் திலிபன் சக்ரவர்த்தி ஆகியோர் சந்தையில் ஆய்வுசெய்தனர்.
 சந்தைக்கு வியாபாரம் செய்யவரும் வியாபாரிகளும், காய் கறிகள் வாங்கவரும் வாடிக்கையாளர்களும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
விழிப்புணர்வு
 இதில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சந்தைக்கு வர அனுமதி இல்லை. மீறுபவர்கள் மீது அபாரதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பிரசாரம் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து செய்யப்படுகிறது.

Next Story