ஊராட்சி பெண் செயலாளர் அடித்துக்கொலை


ஊராட்சி பெண் செயலாளர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 15 Dec 2021 11:57 PM IST (Updated: 15 Dec 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே ஊராட்சி பெண் செயலாளரை இரும்புகம்பியால் அடித்துக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருப்புவனம், 

திருப்புவனம் அருகே ஊராட்சி பெண் செயலாளரை இரும்புகம்பியால் அடித்துக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஊராட்சி பெண் செயலாளர்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கிளாதரி ஊராட்சியில் உள்ள கோனார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அதியமான். இவருடைய மனைவி உதயசூர்யா (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதியமான் சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.
உதயசூர்யா திருப்புவனம் யூனியன் கல்லூரணியில் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய தம்பி ஆசைக்கண்ணன் (27). இவர் சென்னையில் மெட்ரோ ெரயில்வே திட்டத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். 

அடித்துக்கொலை

 இந்த நிலையில் கிளாதரியில் நடைபெற்று வரும் கோவில் திருவிழாவிற்காக ஆசைக்கண்ணன் தனது மனைவியுடன் சென்னையில் இருந்து ஊருக்கு வந்தார். அக்காள் உதயசூர்யா வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்ேபாது அங்கு இருந்த உதயசூர்யா இருவரையும் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆசைக்கண்ணன் அருகில் கிடந்த கம்பியை எடுத்து உதயசூர்யாவை தாக்கியுள்ளார். இதில் பின்பக்க தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசைக்கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story