தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 Dec 2021 1:32 AM IST (Updated: 16 Dec 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகள் அகற்றப்படுமா?
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் குப்பைகள் முறையாக சேகரித்து அகற்றப்படுவது இல்லை. இதனால் ஆங்காங்கே சில இடங்களில் குப்பைகள் கிடக்கின்றன. அதேபோல் கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-காமாட்சி, கெங்குவார்பட்டி.
தொற்றுநோய் பரவும் அபாயம் 
சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்பட்டி ஊராட்சி எஸ்.கொடை கிராமத்தில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு முறையாக சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும். 
-அழகு, கணவாய்பட்டி.
சேதமடைந்த சாலை 
பழனி அருகே அ.கலையம்புத்தூரில் இருந்து ராஜாபுரம் செல்லும் சாலை, கழிவுநீர் ஓடுவதால் சேதம் அடைந்து விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரவில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும். 
-விக்னேஷ், ராஜாபுரம்.
குப்பை தொட்டிகள் சேதம்
சின்னமனூரில் ஒருசில இடங்களில் சேதம் அடைந்த குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் தொட்டியில் இருந்து குப்பைகள் வெளியே விழுகின்றன. மேலும் குப்பைகளை முழுமையாக அள்ளாமல் விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-முத்துராஜ், சின்னமனூர்.
சேறும், சகதியுமான தெரு 
பழனி பாரதிநகரில் சாலை வசதி இல்லாததால் சமீபத்தில் பெய்த மழைக்கு தெரு சேறும், சகதியுமாக மாறிவிட்டது. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் பெரும் அவதி அடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி செய்து தரவேண்டும். 
-அறிவாசான், மானூர்.
மின்கம்பியில் மரக்கிளைகள் 
தேனி குச்சனூரில் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் மின்கம்பிகளின் மீது மரக்கிளைகள் படர்ந்து கிடக்கின்றன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்குள் மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-திருக்குமரன், அல்லிநகரம்.

Next Story