நிலக்கோட்டை அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்


நிலக்கோட்டை அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்
x
தினத்தந்தி 16 Dec 2021 1:44 AM IST (Updated: 16 Dec 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே குட்டத்து ஆவாரம்பட்டியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே எத்திலோடு, இ.ஆவாரம்பட்டி கண்மாய்கள் பல ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்டு காணப்பட்டது. இதனால் வரத்து கால்வாய்களை தூர்வாரி, மஞ்சளாறு அணையில் இருந்து எத்திலோடு, இ.ஆவாரம்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதையடுத்து மஞ்சளாறு அணையில் இருந்து எத்திலோடு, இ.ஆவாரம்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து எத்திலோடு கண்மாய் கடந்த 20 தினங்களுக்கு முன்பு நிரம்பியது. அந்த கண்மாயில் இருந்து இ.ஆவாரம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வந்தது. 
இந்தநிலையில் இ.ஆவாரம்பட்டி கண்மாய் நேற்று முன்தினம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கண்மாய் நிரம்பியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இ.ஆவாரம்பட்டி கண்மாயில் இருந்து மறுகால் பாயும் தண்ணீர் தற்போது மட்டப்பாறை கண்மாய்க்கு சென்று கொண்டிருக்கிறது. 
இதற்கிடையே இ.ஆவாரம்பட்டி கண்மாயில் இருந்து மறுகால் தண்ணீர் வெளியேறுவதை நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிகண்டன் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சின்னமாயன், ரோஸ் நெடுமாறன், தியாகு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

Next Story