பயணிகள் ஓய்வறை கண்ணாடி உடைப்பு


பயணிகள் ஓய்வறை கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 16 Dec 2021 1:56 AM IST (Updated: 16 Dec 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் ஓய்வறை கண்ணாடி உடைப்பு

நாகா்கோவில்:
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் திருநெல்வேலி பஸ்கள் நிற்கும் பிளாட்பாரத்தில் கண்ணாடியால் பயணிகள் ஓய்வறை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு குளிர்சாதன வசதியும் உண்டு. ஆனால் கொரோனா பரவலுக்கு பிறகு இந்த ஓய்வறை மூடியே கிடக்கிறது. 
இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது பயணிகள் ஓய்வறைக்கு வந்த 3 பேர் மதுபோதையில் அவர்களுக்குள்ளே சண்டை போட்டனர். பின்னர் எதிர்பாராத விதமாக ஓய்வறை கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவரை மட்டும் பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். அதைத் தொடர்ந்து பிடிபட்ட மர்ம நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பஸ் நிலையத்தில் பயணிகள் ஓய்வறை கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story