ஆலயத்தில் நகை திருட்டு


ஆலயத்தில் நகை திருட்டு
x
தினத்தந்தி 16 Dec 2021 2:02 AM IST (Updated: 16 Dec 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஆலயத்தில் நகை திருட்டு

நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தினமும் காலை முதல் மாலை வரை பக்தர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் செபஸ்தியார் சொரூபம் முன் நின்று பிரார்த்தனை செய்தனர். அப்போது சொரூபம் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் சொரூபத்தில் அணிவிக்கப்பட்ட 1 பவுன் நகையையும் காணவில்லை. இரவில் யாரோ மர்ம நபர்கள் ஆலயத்துக்குள் புகுந்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. 
இந்த சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிவாகியிருந்த இருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. ஆலயத்திற்குள் புகுந்து நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story