தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் இனிவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. அதன் அடிப்படையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். முகாமில் 4 முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். எல்.ஐ.சி. நிறுவனத்தின் முகவராக 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த வாய்ப்பினை விருதுநகர் மாவட்ட வேலை நாடுனர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இம்முகாமில் கலந்து கொள்ள வரும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. எனவே இந்த வாய்ப்பினை வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story