அறுவடைக்கு தயார் நிலையில் சோளப்பயிர்
திருச்சுழி அருகே அறுவடைக்கு தயார் நிலையில் சோளப்பயிர் வளர்ந்துள்ளது.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே அறுவடைக்கு தயார் நிலையில் சோளப்பயிர் வளர்ந்துள்ளது.
சோளப்பயிர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி யூனியனுக்குட்பட்டது எம்.ரெட்டியபட்டி கிராமம். போதிய மழை பெய்யாத நிலையில் அங்குள்ள விவசாயிகள் சோளம், கம்பு, உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து இருந்தனர்.
இந்தநிலையில் எதிர்பாராமல் தற்போது தொடர்ந்து மழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் நிறைந்து விட்டன. தற்போது சோளப்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து விவசாயி கணேசன் கூறியதாவது:-
எம்.ரெட்டியபட்டி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் சோளம், கம்பு பயிர்களை பயிரிட்டு உள்ளோம்.
அறுவடைக்கு தயார்
போதிய மழை இல்லாத நிலையில் இந்த பயிர்களை சாகுபடி செய்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக பெய்த மழையால் சோளப்பயிர் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
ஆனால் உளுந்து விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை. பருத்தி மகசூல் பரவாயில்லை. எங்கள் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளப்பயிரினை சில இடங்களில் காட்டு பன்றிகள் நாசப்படுத்தி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story