போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2021 2:23 AM IST (Updated: 16 Dec 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
குமரி மாவட்ட அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பி.எம்.எஸ். சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு ேபாக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் பணிபுரியும் டிரைவர்கள் மீது உண்மைக்கு புறம்பாக குற்றம் சுமத்தி தற்காலிக பணிநீக்கம் ெசய்வதாகவும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்வதாகவும் கூறி தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதோடு பயணிகள் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சாமி தலைமை தாங்கினார். பொருளாளர் சின்னையன் முன்னிலை வகித்தார். செயலாளர் வேலப்பன், பொதுச்செயலாளர் கிரீஸ், அமைப்பாளர் நடேசன், ராஜாமணி, விஸ்வநாதன், விஜயகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story