வீட்டில் மதுவை பதுக்கி விற்றவர் கைது


வீட்டில் மதுவை பதுக்கி விற்றவர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2021 2:33 AM IST (Updated: 16 Dec 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் மதுவை பதுக்கி விற்றவர் கைது

நாகர்கோவில்:
நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில், மது விற்பனை நடப்பதாக கோட்டார் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 20 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும், அந்த வீட்டை பொிய விளையை சேர்ந்த இளையபாரதி (வயது 31) என்பவர் வாடகைக்கு எடுத்து மதுவை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இளைய பாரதியை போலீசார் கைது செய்தனர். மேலும் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story